முன்பெல்லாம் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால், நாளு கடை ஏறி இறங்கி, அந்த பொருளின் தரத்தை அலசி ஆராய்ந்து பார்ப்பார்கள். ஆனால், தற்போதுள்ள நவீன காலகட்டத்தில், ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்து வருகின்றனர்.
இந்த மாதிரியான ஆன்லைன் ஷாப்பிங்கில், அலைச்சல் குறைவு என்பதாலும், போக்குவரத்து செலவு இல்லாததாலும், மக்கள் இதையே முதல் ஜாய்சாக வைத்துள்ளனர்.
ஆனால், சில நேரங்களில், இதுமாதிரியான ஆன்லைன் ஷாப்பிங், வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்களும், ஆங்காங்கே நடந்து வருகின்றன.
அதாவது, நாம் ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதிலாக, வேறொரு பொருளை அனுப்பி வைக்கும் சம்பவங்களை, இந்த ஆன்லைன் விற்பனை வெப்சைட்டுகள் செய்கின்றன. இந்நிலையில், இதேமாதிரியான சம்பவம் ஒன்று, அமேசான் வாடிக்கையாளர் ஒருவருக்கு நடந்துள்ளது.
அதாவது, அவர் அமேசான் ஆன்லைன் வெப்சைட்டில், ளுழலெ ஒடி910n என்ற ஹெட்ஃபோனை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அதற்கு பதிலாக, கோல்கேட் பேஸ்ட் தான், அவருக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
இதனை வீடியோவாக எடுத்த அவர், இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில், அமேசான் நிறுவனம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது.
அந்த நிறுவனம் அளித்துள்ள பதிலில், ‘முன்னுரிமையின் அடிப்படையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளிக்கிறோம். அதுவரை தயது செய்து காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.