ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு பதிலாக, இன்னொரு பொருள் டெலிவரி செய்யும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.
இந்த சம்பவங்களால் கடுப்பாகும் வாடிக்கையாளர்கள், அதனை இணையத்தில் பதிவிட்டு, நிறுவனத்தை வசைபாடி வந்தனர். ஆனால், பொறியாளர் ஒருவர் ஒருபடி மேலே சென்று, காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அதாவது, மும்பை நகரை சேர்ந்த பொறியாளர் அமர் சவான், கடந்த 13-ஆம் தேதி அன்று, 55 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை, அமேசானில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், 2 நாட்கள் கழித்து, செல்போனுக்கு பதிலாக, தேநீர் அருந்தும் கோப்பைகள் தான் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
இதனை கண்டு அதிர்ந்த அமர், அமேசான் நிர்வாகிகள் மீது, காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது.