கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால், பொதுமக்கள் பலரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். உலக பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரசால், ஊழியர்கள் பலரும் பணியை இழந்து வருகின்றனர்.
குறிப்பாக, கூகுள், மெட்டா நிறுவனங்கள், தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இவ்வாறு இருக்க, ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான், தனது 18 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆயிரம் ஊழியர்கள் ஏற்கனவே நீக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தொடக்கமே அந்நிறுவன ஊழியர்களுக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனா பேரிடரை சமாளிப்பதற்காக தான், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.