பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தனது அலெக்ஸா பிரிவில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
அலெக்ஸா பிரிவின் கீழ் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பணிபுரிபவர்களும் இதில் அடங்குவர். 50 கோடிக்கும் அதிகமான அலெக்ஸா கருவிகளை அமேசான் விநியோகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள அமேசான் ஊழியர்கள் வேலையை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.