மீண்டும் இணையும் அம்பானி, அதானி – உருவாகும் புதிய திட்டம்!

கௌதம் அதானி-யின் அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை தலா இரண்டு புதிய கம்பிரஸ்டு பயோகேஸ் (compressed biogas – CBG) தொழிற்சாலையை அமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் வருஷத்திற்கு 40 மில்லியன் டன் பயோகேஸ் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலத்தில் அமைக்கத் திட்டமிட்டு உள்ளது.

இதே அளவில் இரு பயோகேஸ் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அமைக்க உள்ளது.
இந்தத் தொழிற்சாலைகளை அமைக்க அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலா 600 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளது.

இதன் மூலம் எரிவாயு துறையில் இரு பெரிய பணக்காரர்களும் ஓரே நேரத்தில் நுழைய உள்ளதால் இவர்களின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே இருக்கும்.
கம்பிரஸ்டு பயோகேஸ் (compressed biogas – CBG) என்பது விவசாயக் கழிவுகள், கரும்பு சக்கை கழிவுகள் மற்றும் நகராட்சி கழிவுகள் மூலம் உற்பத்தி செய்யப்படுவது.

மேலும் CBG மூலம் கிரீன் ஹைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்ய முடியும். இதை வைத்து வீட்டு உபயோகத்திற்காகக் குழாய் வாயிலாக வரும் இயற்கை எரிவாயுவிற்கு மாற்றாகப் பயன்படுத்த முடியும்.

அனைத்திற்கும் மேலாக இந்தக் கம்பிரஸ்டு பயோகேஸ்-ஐ (compressed biogas – CBG) எரிவாயுவில் இயங்க கூடிய வாகனங்களுக்கும் எரிபொருளாகப் பயன்படுத்த முடியும்.

அதானி குழுமம் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கீழ் ரீடைல் எரிபொருள் விற்பனை நிலையங்கள் இருக்கும் காரணத்தால் இதைப் பயோகேஸ் உற்பத்தி மூலம் மிகப்பெரிய வருமானத்தைப் பார்க்க முடியும்.