‘இந்திய அரசியலமைப்பின் தந்தை’ எனப் போற்றப்படும் பாபாசாகேப் அம்பேத்கர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ஆவார். பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக போராடிய அண்ணல் அம்பேத்கர் 1956 டிசம்பர் 6-ஆம் தேதி தனது 65வது வயதில் காலமானார்.
இந்நிலையில் நினைவு நாளை முன்னிட்டு இன்று (டிசம்பர் 6) காலையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.