சரண் இயக்கத்தில், அஜித், ஷாலினி, ரகுவரன் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் அமர்க்களம். இந்த திரைப்படத்தில், ஷாலினியின் தாய் கதாபாத்திரத்தில், நடிகை அம்பிகா நடித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை அம்பிகா, ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், அமர்க்களம் ஷீட்டிங்கின்போது, நடந்த சுவாரசியம் சம்பவம் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதாவது, குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு பணம் தேவை என்ற செய்தியை, செய்தித்தாள் ஒன்றில், அஜித் படித்துள்ளாராம்.
இந்த செய்தியை படித்த பிறகு, அதுதொடர்பான நபர்களிடம், இது உண்மையா என்று விசாரித்துள்ளார்.
பின்னர், உண்மை என்று தெரிந்த பிறகு, அறுவை சிகிச்சைக்கு தேவையான பணத்தை அளித்துள்ளாராம். இவ்வாறு தனது அந்த பேட்டியில், அம்பிகா கூறியுள்ளார்.