நடுவானில் விமானம் சென்ற போது பற்றி எறிந்த தீ – பரபரப்பு வீடியோ

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் இருந்து அரிசோனா மாகாணம் பினிக்ஸ் நகருக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை புறப்பட்டது.

விமானம் நடுவானில் சென்ற போது என்ஜின் மீது பறவை மோதியதால் என்ஜினில் தீ பற்றியது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பதற்றமடைந்தனர்.

இதை அறிந்த விமானி விமானத்தை அவசர அவசரமாக தரையிறக்கினார். பின்னர் உடனடியாக என்ஜினில் பற்றிய தீ அணைக்கப்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News