ஒவ்வொரு நாட்டிலும், தனிநபருக்கான செலவுகள் என்பது அதிகரித்துக் கொண்டே உள்ளது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை குறிப்பதாக இருந்தாலும், அனைவருக்குமான சம்பளம் என்பது, ஏற்ற இறக்கத்துடனே உள்ளது. இதன்காரணமாக, பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள், ஒரு குழந்தைகளை பெற்றுக் கொள்ளவே பயப்படுகிறார்கள்.
குறிப்பாக, அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில், குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், தனது 28 வயதிற்குள், 9 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
அதாவது, கோரா டியூக் என்ற 39 வயதான பெண், டிக்-டாக் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன்னுடைய 17 வயதில் இருந்து 28 வயது வரை, 9 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக கூறியுள்ளார். தற்போது, இந்த 9 குழந்தைகளையும், தனது கணவன் ஆண்ட்ரோவுடன் இணைந்து, கோரா டியூக் வளர்த்து வருகிறார்.
இந்த தம்பதிக்கு எலியா 21, ஷீனா 20, ஜான் 17, கெய்ரோ 16, சயா 14, அவி 13, ரோமானி 12, மற்றும் தாஜ் 10 என 8 குழந்தைகள் உள்ளனர். 3-வதாக பிறந்த குழந்தை மட்டும், உடல்நலப் பிரச்சனையால், உயிரிழந்துள்ளது. 1 குழந்தைகள் பெற்றுக் கொள்ளவே அமெரிக்கர்கள் அச்சப்படும் வேளையில், கோரா டியூக் 9 குழந்தைகள் பெற்றுக் கொண்டுள்ளது, அந்நாட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.