சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைர் ரோஹினி காட்சே, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச் சம்பவங்களில், அவர்கள் குற்றவாளியை கொலை செய்தால், தண்டனைகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அடக்குமுறைக்கு ஆளான மனநிலையை பெண்கள் கொலை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், மும்பையில், 12 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை, அந்த கடிதத்தில் குறிப்பிட்டு பேசிய ரோஹினி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், ஆய்வு முடிவுகளை குறிப்பிட்ட அவர், உலகத்திலேயே, பெண்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற இடமாக இந்திய உள்ளது என்றும், கடத்தல், வீடுகளில் நடக்கும் தாக்குதல்கள் அதிக அளவில், இந்தியாவில் நடக்கிறது என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து, நமது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று நம்புவதாகவும், அந்த கடிதத்தில், ரோஹினி கூறியுள்ளார்.