அஜித் போன்று அதிரடி முடிவு எடுத்த அமீர்கான்!

பாலிவுட் நடிகர் அமீர்கான், லாங் சிங் சத்தா என்ற படத்தில் சமீபத்தில் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம், போதிய வரவேற்பை பெறாமல், தோல்வி அடைந்தது.

180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், உலகம் முழுவதும் வெறும் 130 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. இதனால், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இந்த தோல்வியின் காரணமாக, சில வருடங்களுக்கு திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று அமீர்கான் முடிவு எடுத்துள்ளாராம். இதேபோன்று, அஜித்தும் ஒன்றரை வருடங்களுக்கு திரைப்படங்களில் நடிக்காமல் இருக்கப்போகிறார் என்று சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.