இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கனவு படைப்புகளில் ஒன்றாக இருப்பாக இரும்புக் கை மாயாவி. சூர்யாவை வைத்து, இந்த திரைப்படத்தை இயக்குவதற்கு அவர் முயற்சி மேற்கொண்டு வந்தார். ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, அந்த கதை, திரைப்படமாக உருவாகவில்லை.
இந்நிலையில், இரும்புக் கை மாயாவி குறித்து, புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது, கூலி படத்திற்கு பிறகு, கைதி 2 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.
இதையடுத்து, பாலிவுட்டிற்கு செல்லும் அவர், நடிகர் அமீர்கானை வைத்து, இரும்புக்கை மாயாவி படத்தை இயக்க உள்ளாராம். இதற்கு நடிகர் சூர்யாவும் ஒப்புதல் அளித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில், Pan இந்தியா அளவில், இந்த திரைப்படம் கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.