பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு நீதி மன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஆளுநர் ஆர்.என் ரவி செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இதையடுத்து ஆர்.என் ரவி தனது உத்தரவை வாபஸ் வாங்கினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என் ரவி முதலமைச்சர் மு .க ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் உள்துறை அமைச்சகத்திடமிருந்து அறிவுறுத்தல் வந்ததால் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் முடிவை நிறுத்தி வைத்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.
செந்தில்பாலாஜி பதவி நீக்க விவகாரத்தில், தேவையற்ற ஆபத்தை தவிர்க்க முடிவு எடுப்பதற்கு முன் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்க வேண்டும் என கூறியதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.