அமித் ஷா கண்டித்தாரா? தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்!

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழாவில் தமிழிசையை, உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா எச்சரிக்கை விடுக்கும் தோரணையிலான வீடியோ வெளியாகி சர்ச்சையை உருவாக்கியது.

இதையடுத்து, நேற்று (ஜூன் 12) தமிழிசை சௌந்தரராஜனிடம், சென்னை விமான நிலையத்தில் இந்த நிகழ்வு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் பதில் அளிக்காமல், நன்றி தெரிவித்து வேகமாக சென்றுவிட்டார்.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, 2024 தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தபோது, தேர்தலுக்குப் பிந்தைய நிலைமை குறித்து கேட்க என்னை அழைத்தார். மற்றும் மிகுந்த அக்கறையுடன் அரசியல் பணிகளையும் தொகுதிப் பணிகளையும் தீவிரமாக மேற்கொள்ளுமாறும் என்னை அறிவுறுத்தினார். இந்தப் பதிவு, சமூக ஊடகங்களில் பரவிவரும் தேவையற்ற ஊகங்களையும் தெளிவுபடுத்துவதற்காகும் எனப் பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News