மாநிலங்களவையில் திங்கள்கிழமை உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நேரு தவறு செய்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக ராகுல் காந்தி பேசியதாவது, “ஜவஹர்லால் நேரு அவரின் வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது. வரலாற்றை மாற்றி எழுத முயன்று கொண்டிருக்கும் அவருக்கு உண்மையான வரலாறு தெரிந்திருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
இது எல்லாமே மக்களின் கவனத்தை ஜாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில் இருந்து திசைதிருப்புவதற்காக செய்யப்படுபவை. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து பேசுவதற்கே பாஜக பயப்படுகிறது.
ஆனால் காங்கிரஸ் இந்த விவகாரத்தை தொடர்ந்து முன்னெடுக்கும். ஏழை, எளிய மக்களுக்கான உரிமைகள் கிடைப்பதற்கு காங்கிரஸ் போராடும்.” என்று தெரிவித்துள்ளார்.