Connect with us

Raj News Tamil

ரொக்கப் பணம் ரூ.24 ஆயிரம்.. கார் இல்லை.. பிரமாணப் பத்திரத்தில் அமித்ஷா!

இந்தியா

ரொக்கப் பணம் ரூ.24 ஆயிரம்.. கார் இல்லை.. பிரமாணப் பத்திரத்தில் அமித்ஷா!

முதற்கட்ட நாடாளுமன்ற தேர்தல் ஏற்கனவே முடிந்த நிலையில், மற்ற 6 கட்ட தேர்தலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடக்க உள்ளது. 3-ஆம் கட்டமாக நடக்க உள்ள குஜராத்தின் 26 தொகுதிகளுக்கான தேர்தல், மே 7-ஆம் தேதி அன்று, நடைபெற இருக்கிறது.

இதில், காந்திநகர் தொகுதியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்டியிட உள்ளார். இதனால், தன்னுடைய தேர்தல் பிரமாணப் பத்திரத்தை அவர் தாக்கல் செய்திருந்தார்.

அந்த பிரமாணப் பத்திரத்தில், தன்னிடம் சொந்தமாக கார் இல்லை என்றும், தன்னிடம் ரொக்கமாக 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், தொழில் என்ற பகுதியில், விவசாயி மற்றும் சமூக சேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, தன்மீது 3 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஷேர்ஸ், டிவிடென்ட்ஸ் மூலமாக கிடைக்கும் பணம், விவசாயம் மூலம் கிடைக்கும் பணம், தன்னிடம் உள்ள கட்டடங்களின் வாடகை, எம்.பியாக கிடைக்கும் சம்பளம் ஆகியவை தான், தனது முக்கிய வருவாய் ஆதாரங்கள் என்றும், பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனது அசையும் சொத்துக்களின் மதிப்பு 20 கோடி ரூபாய் என்றும், அசையா சொத்துக்களின் மதிப்பு 16 கோடி ரூபாய் என்றும் குறிப்பிட்டுள்ளார். தங்க நகைகளின் மதிப்பு குறித்து குறிப்பிடும்போது, 72 லட்சம் ரூபாய் மதிப்பில் தன்னிடமும், 1.10 கோடி ரூபாய் மதிப்பில், தனது மனைவியடமும், தங்க நகைகள் இருப்பதாக கூறியுள்ளார்.

அமித்ஷா மனைவியின் சொத்துக்கள்:-

அமித்ஷாவின் மனைவி சோனல் ஷாவிடம், ஒட்டுமொத்தமாக 31 கோடி ரூபாய் வரை சொத்து இருப்பதாகவும், இதில், அசையும் சொத்துக்களின் மதிப்பு 22.46 கோடி ரூபாயும், அசையா சொத்துக்களின் மதிப்பு 9 கோடி ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022-23 ஆம் ஆண்டுகளில் வந்த வருமானம்:-

2022-23 ஆம் நிதியாண்டுகளில், அமித்ஷா 75.09 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளதாகவும், அவரது மனைவி சோனல் ஷா, 39.54 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளதாகவும், பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், 57 சதவீத சொத்துக்கள், பங்குகளில் உள்ளது.

2019-ல் இருந்த சொத்து:-

Economic Times-ன் கூற்றுப்படி, சென்ற முறை அமித்ஷா பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தபோது குறிப்பிட்டதை விட, இந்த முறை சொத்துக்களின் மதிப்பு ஒரு மடங்கு அதிகமாகியுள்ளது. அதாவது, 2019-ஆம் ஆண்டு தனது சொத்துக்களின் மதிப்பு 30.49 கோடி ரூபாய் என்றும், தற்போது 65 கோடி ரூபாய் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in இந்தியா

To Top