2023-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி அன்று, குகி மற்றும் மெய்தி சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மத்தியில், மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில், 220-க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அப்போது கூறப்பட்டது.
இதுமட்டுமின்றி, பெண்கள் நிர்வாணமாக, ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். இவ்வாறு தொடர்ச்சியாக நடந்த கலவரத்தின் விளைவாக, அம்மாநிலத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்த சம்பவம் நடந்து ஒரு வருடமாகியும், அம்மாநிலத்தில் பரபரப்பு இன்னும் அடங்காமல் உள்ளது. எனவே, இந்த பிரச்சனை குறித்து, மனிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவும், அமித்ஷாவும் நேற்று விவாதித்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், மத்திய, மாநில அரசின் உயர் அதிகாரிகள், மற்ற பாதுகாப்பு படைகள், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் அடங்கிய கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், மனிப்பூரில் நிலவும் சூழ்நிலை குறித்து, அமித்ஷா மதிப்பாய்வு செய்ய இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.