“பெரிய பசங்களோடு சண்டை போட்டேன்” – அமிதாப் பச்சன்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், சமீபத்தில் கலந்துக் கொண்டார். அதில், குழந்தைகளுடன் கலந்துரையாடிய அவர், பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.

அப்போது, குள்ளமாக உள்ளவர்களை எனக்கு பிடிக்காது என்று சிறுமி ஒருவர் கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த அமிதாப் பச்சன், உயரம் அதிகமாக இருந்ததால், நான் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துள்ளேன் என்று தெரிவித்தார்.

“நான் படித்த பள்ளியில், அனைவரும் குத்துச்சண்டை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது விதி. எனவே, நானும் கற்றுக்கொள்ள சென்றேன். ஆனால், நான் உயரம் அதிகமாக இருந்ததால், என்னை விட பெரிய பசங்களுடன் சண்டை போட்டேன்” என்று தெரிவித்தார். இவரது பேச்சை கேட்டு, அரங்கத்தில் இருந்த அனைவரும் சிரித்தனர்.