Connect with us

Raj News Tamil

அயோத்தி ராமர் கோயில் அருகே வீட்டுமனை வாங்கிய அமிதாப் பச்சன்..!

சினிமா

அயோத்தி ராமர் கோயில் அருகே வீட்டுமனை வாங்கிய அமிதாப் பச்சன்..!

புனித நகரமான அயோத்தியில் வரும் 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு அங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அயோத்தியில் 10 ஆயிரம் சதுர அடியில் வீட்டுமனையை வாங்கியிருப்பதாகவும் இதன் மதிப்பு ரூ.14.5 கோடி இருக்கும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. அயோத்தியின் சராயு பகுதியில் இந்த வீட்டு மனை அமைந்துள்ளது. ராமர் கோவிலில் இருந்து 15 நிமிட தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது.

More in சினிமா

To Top