தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில், ப்ராஜெக்ட் கே என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கியமான கேரக்டர் ஒன்றில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் சண்டைக் காட்சி ஒன்று, சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அதில் கலந்துக் கொண்ட அமிதாப் பச்சனுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர், சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்பேரில், மும்பையில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.