முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, அம்மா உணவகம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அவர் தொடங்கிய வைத்த திட்டங்களிலேயே பெரும் வரவேற்பை பெற்ற இந்த திட்டம், பலரது பசியை போக்கி, பல மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் மாறியது.
இவ்வாறு இருக்க, அமெரிக்காவிலும், அம்மா உணவகம் இருக்கிறது என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில், அம்மாஸ் கிச்சன் என்ற பெயரில், ஜெயலலிதாவின் புகைப்படங்களுடன் கூடிய, கிச்சன் ஒன்று இயங்கி வருகிறதாம்.
இங்கு மிகவும் குறைந்த விலையில் உணவுகள் விற்கப்படுவதால், அந்நாட்டு இந்தியர்களின் ஃபேவரைட் ஸ்பாட்டாக, இந்த உணவகம் இருந்து வருகிறது. மேலும், வெறும் 18 டாலருக்கு, அன்லிமிடெட் அசைவ உணவுகள், விற்பனை செய்யப்படுகிறதாம். ஜெயலலிதாவின் மீதுள்ள அன்பாலும், மரியாதையாலும் தான், இந்த உணவகத்தை அதன் உரிமையாளர் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.