மிரட்டும் திமுக கவுன்சிலர்கள் : அம்மா உணவக பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு….

சேலம் மாநகர் முழுவதும் 11 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது இந்த உணவகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அம்மா உணவகங்களுக்கு முறையாக மளிகை பொருட்கள் காய்கறிகள் எதுவும் வழங்கப்படாமல் உள்ளதாகவும், அந்தந்த பகுதியை சேர்ந்த திமுக கவுன்சிலர்கள் மற்றும் மண்டல குழு தலைவர்கள் அம்மா உணவக பணியாளர்களுக்கு பல்வேறு மிரட்டல்களை விடுப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சேலம் 50ஆவது வார்டு பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவக பணியாளர்கள்
அம்மா உணவகத்திற்கு முறையாக மளிகை பொருட்கள் வழங்க வேண்டும், பணியை விட்டு செல்லும்படி நிர்பந்திக்கும் திமுக கட்சி பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.

RELATED ARTICLES

Recent News