Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

பிரபல இயக்குநரை காதலிக்கும் அம்மு அபிராமி! உறுதியான தகவல்!

சினிமா

பிரபல இயக்குநரை காதலிக்கும் அம்மு அபிராமி! உறுதியான தகவல்!

ராட்சசன், தீரன் அதிகாரம் ஒன்று, அசுரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் அம்மு அபிராமி.

இவர், சமீபத்தில், கண்ணகி, ஹாட் ஸ்பாட் ஆகிய படங்களில், முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பே.. பிறந்ததற்கு நன்றி.. என் வாழ்வில் வந்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரபல சமையல் ரியாலிட்டி ஷோவின் இயக்குநருடன், நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், இவர்கள் இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்துவிட்டது என்று கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு முன்னர், இருவரும் காதலித்து வருவதாக, இணையத்தில் தகவல் பரவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top