டீசல் போடவேண்டிய காரில் பெட்ரோல் போட்ட ஊழியர்..!! புலம்பிய அதிமுக பிரமுகர்

மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எழுச்சி மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்க பிச்சைமுத்து என்பவர் மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு செல்வதற்காக தனது விலை உயர்ந்த டீசல் காரில் சென்றுள்ளார்.

தனது காரில் டீசல் நிரப்புவதற்காக காரின் டிரைவர் பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார். அப்போது பங்க் ஊழியர் டீசல் போடுவதற்கு பதிலாக பெட்ரோல் நிரப்பியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இன்று நான் மாநாட்டிற்கு செல்ல வேண்டும். இப்பொது நான் என்ன செய்வது என அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் மற்றும் கார் ஓட்டுநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

RELATED ARTICLES

Recent News