திரைப்படத்தை மிஞ்சும் என்கவுண்டர்! – ரௌடிகள் 2 பேர் பலி!

காஞ்சிபுரத்தை சோ்ந்த பிரபாகரன்(30) என்பவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. இது தொடர்பாக காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக வந்து கொண்டிருந்த பிரபாகரனை காரில் வந்த 3 போ் கொண்ட மா்மக்கும்பல் பிள்ளையார்பாளையம் அருகே கத்தியால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பியுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வந்தனா். இந்த நிலையில், ரகு மற்றும் அசான் ஆகிய இரண்டு பேர் தான் இந்த கொலை வழக்கில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதனிடையே, காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே உள்ள இந்திராநகர் பகுதியில் ரகு மற்றும் அசான் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போது குற்றவாளிகளான ரகுவும் அசானும் போலீசாரை அரிவாளால் தாக்கியுள்ளனர்.

இதை தொடர்ந்து தற்காப்புக்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரௌடிகள் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ரௌடிகள் தாக்கியதில் சிறப்பு காவல் உதவியாளர் ராமலிங்கம், காவலர் சசிகுமார் ஆகிய 2 பேரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த என்கவுண்டர் சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News