நாடு திரும்பிய வினேஷ் போகட்டுக்கு உற்சாக வரவேற்பு!

பிரான்ஸ் தலைவர் பாரீஸில் 33-வது ஒலிம்பிக் போட்டி 16 நாட்கள் நடைபெற்றது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10,741 வீரர், வீராங்களைகள் பங்கேற்றனர்.

இதில் மல்யுத்தத்தில் 50 கிலோ உடல் எடைப்பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், நிர்ணயிக்கப்பட்டதைவிட 100 கிராம் கூடும் உடல் உடையுடன் இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வினேஷ் போகத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் எம்பி தீபேந்தர் ஹூடா, சக மல்யுத்த வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் வினேஷ் போகத்தை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றனர்.

பின்னர் அவர் வாகனத்தில் அமர வைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். மிகவும் சோர்வாக காணப்பட்ட அவருக்கு நண்பர்கள் பலரும் ஆறுதல் வார்த்தைகளை தெரிவித்தபடி உடன் சென்றனர். எனினும், சில தருணங்களில் அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

வரவேற்க வந்த அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களைப் பார்த்து அவர் கண் கலங்கினார். கைகளைக் கூப்பி அனைவருக்கும் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News