சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் முனுசாமி மற்றும் வீரம்மாள் தம்பதி. இவர்களுக்கு சொந்தமாக 75 சென்ட் நிலம் உள்ளது. கடந்த நான்காண்டு காலமாக அந்த நிலத்திற்கு பட்டா வழங்கும் படி மேட்டூர் வருவாய் அலுவலகத்திலும், வட்டாட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்து வந்து உள்ளனர்.
ஆனால் நான்காண்டுகளாகியும் பட்டா வழங்காததால் மனம் உடைந்த தம்பதி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றுள்ளனர்.
இதனை கண்ட காவல்துறையினர், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அமரவைத்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த தம்பதியினர் தங்கள் நிலத்திற்கு உடனடியாக பட்டா வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.