பாலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஜான்வி கபூர். தேவாரா படத்தின் மூலம், தென்னிந்திய சினிமாவில் அறிமுகமான இவர், தற்போது பல்வேறு படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், ஜான்வி கபூருக்கு, அவரது நெருங்கிய தோழி விலை உயர்ந்த பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். அதாவது, ஜான்வி கபூருக்கு சொகுசு கார்களின் மீது அதிக விருப்பம் உள்ளதாம்.
இதனை தெரிந்துக் கொண்ட அனன்யா பிர்லா, 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்லீக் லம்போகினி காரை, ஜான்வி கபூருக்கு பரிசாக வழங்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.