கோவை தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் வானதி சீனிவாசன். இவருடைய அலுவலகத்தில் நேற்று மாலை கருப்பு சட்டை அணிந்த ஒரு நபர் உள்ளே நுழைந்துள்ளார். அப்போது அங்கிருந்த வானதி சீனிவாசனின் உதவியாளர் அந்த நபரை அலுவலகத்தில் இருந்து பிடித்து வெளியேற்றியுள்ளார்.
அப்போது அந்த நபர் சாலையில் விழுந்துள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவிவில் பதிவாகி உள்ளது. வெளியே தள்ளப்பட்ட அந்த நபர் இரவு 8 மணி அளவில் அண்ணா சிலை சிக்னல் அருகே சடலமாக கிடந்துள்ளார்.
நபரின் உடலை கைப்பற்றிய போக்குவரத்து காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானதி சீனிவாசன் எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.