கலைஞரின் பாதுகாப்பு அதிகாரிக்கே இந்த நிலையா? – அன்புமணி தாக்கு!

நெல்லையில் காவல்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜாகீர் உசேன், இன்று காலை படுகொலை செய்யப்பட்டிருந்தார். நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் ஆட்சியின்போது, அவரது பாதுகாப்பு அதிகரியாக செயல்பட்டவர் தான் ஜாகீர் உசேன் என்றும், அவரையே வெட்டிக் கொலை செய்யும் அளவுக்கு, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மோசம் அடைந்திருக்கிறது என்றும், கூறியுள்ளார்.

மேலும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, ஜாகிர் உசேன் காவல்துறையில் புகார் அளித்திருப்பதாகவும், ஆனால் காவல்துறையினர் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.

தொடர்ந்து, இந்த படுகொலைக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும், ஜாகிர் உசேனின் புகாரை ஏற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் வலியுறுது்தியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News