“பாமக ஜனநாயக கட்சி.. விவாதம் நடைபெறுவது சகஜம்தான்..” – அன்புமணி

புதுச்சேரியில் பாமக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், இளைஞர் அணி தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக, தலைவர் அன்புமணி-க்கும், நிறுவனர் ராமதாஸ்-க்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த கூட்டத்தில் இருந்து, மிகவும் கோபத்துடன், அன்புமணி கிளம்பிச் சென்றார்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில், ராமதாசை அன்புமணி சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து, சமரம் ஏற்பட்டது.

இதையடுத்து, அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாட்டாளி மக்கள் கட்சி ஒரு ஜனநாயக கட்சி. காரசார விவாதம் நடைபெறுவது சகஜமான ஒன்று தான்” என்று தெரிவித்தார். மேலும், “எங்களின் உட்கட்சி பிரச்சனையை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்” என்றும், அவர் கூறினார்.

RELATED ARTICLES

Recent News