ஆந்திர முதல்வர் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி அதிரடி கைது..!

ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா. கடந்த ஆண்டு ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா என்ற கட்சியை துவங்கிய இவர், தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் ஆளும் கட்சியை எதிர்த்து, நடைபயணம் மேற்கொண்ட போது, இவரது ஆதரவாளர்களுக்கும் , முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இச்சம்பவத்திற்கு நியாயம் கேட்டு சந்திரசேகர் ராவ் வீடு நோக்கி சென்ற ஷர்மிளாவை, காவல்துறையினர் தடுக்க முயன்றும் கேட்காததால், காருடன் கைது செய்தனர். இச்சம்பவம் தெலுங்கானா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.