போட்டோ எடுக்க வந்தே பாரத் ரயிலில் ஏறிய நபர்.. மூடிய கதவுகள்.. புறப்பட்ட ரயில்..

இந்தியாவின் சிறந்த ரயில்களில் ஒன்றாக, வந்தே பாரத் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பல நவீன ஏற்பாடுகள், பயணிகளின் வசதிக்காக தயார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ரயிலின் நவீன வசதிகளை பார்ப்பதற்காக ஏறிய நபர், திடீரென கதவு முடியதால், நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திராவில் உள்ள ராஜமகேந்திரவரம் பகுதி ரயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரயில் வந்துள்ளது. இதன் நவீன வசதிகளை பார்ப்பதற்காக, 40 வயதுடைய நபர் ஒருவர், அந்த ரயிலில் ஏறியுள்ளார். ஆனால், ரயிலில் ஏறிய சில நிமிடங்களில், அதன் கதவுகள் மூடியுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்த TTR-யிடம் கதவைத் திறக்குமாறு தெரிவித்துள்ளார். “வந்தே பாரத் ரயிலில் நினைத்த நேரங்களில் கதவை திறக்க முடியாது. அடுத்த ரயில் நிலையம் வரும்போது தான், கதவை திறக்க முடியும்.. எனவே காத்திருங்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும், “ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததற்காக, டிக்கெட் தொகையுடன், அபராத தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும்” என்று TTR தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் டிடியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆனால் டிடி, “ரயில்வே சட்டப்படி உங்கள் வாக்குவாதம் எடுபடாது. எனவே நீங்கள் விஜயவாடா வரை பயணம் செய்தே ஆக வேண்டும். இடையில் ரயில் நிற்காது. கதவையும் நான் திறக்க இயலாது. கதவின் முழு கட்டுப்பாடு அனைத்தும் ரயில் டிரைவரிடம் இருக்கும்” என்று கூறிவிட்டார்.

இதனால் வேறு வழியின்றி, 150 கி.மீ வரை பயணித்த அவர், விஜயவாடாவில் இறங்கி, அங்கிருந்து தான் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றுள்ளார்.

RELATED ARTICLES

Recent News