ஆந்திர மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் வங்கலபுடி அனிதா. இவர் விஜயவாடாவில் இருந்து மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இன்று காரில் சென்று கொண்டிருந்தார்.
இவருடைய கார் பாதுகாப்பு வாகனத்தின் பின்னால் மோதியது. இருப்பினும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க பாதுகாப்பு வாகனத்தின் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் இந்த விபத்து ஏற்பட்டது.
பின்னர் அனிதா மற்றொரு வாகனத்தில் ஆலம்புரம் புறப்பட்டு சென்றார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.