“என் கட்சி ஜெயிக்கும்” – சூதாட்டத்தில் ஈடுபட்டு ரூ.30 கோடி இழப்பு.. YSR காங்கிரஸ் முக்கிய நிர்வாகி தற்கொலை!

ஆந்திர பிரதேசத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள், கடந்த ஜூன் 4-ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்டது. இதில், முன்பு ஆட்சியில் இருந்த YSR காங்கிரஸ் கட்சி, வெறும் 11 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

ஆனால், அதனை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி, 135 இடங்களை கைப்பற்றி, அபார வெற்றியை பெற்றது. இதன்மூலம், சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி, அங்கு ஆட்சியை கைப்பற்றியது.

இந்த தேர்தலில், YSR காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெறும் என்று, சூதாட்டத்தில் ஈடுபட்ட அக்காட்சியின் முக்கிய நிர்வாகி, தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அதாவது, ஆந்திர பிரதேசத்தின் எலூரு மாவட்டத்தில் உள்ள துர்புடிகவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜகவரப்பு வேணுகோபால் ரெட்டி.

இவர், YSR காங்கிரஸ் கட்சியில் மூத்த நிர்வாகியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், தன்னுடைய கட்சி, நுசிவீடு மண்டல் தொகுதியில், வெற்றி பெறும் என்று, வேணுகோபால் ரெட்டி பல்வேறு தரப்பினரிடம், 30 கோடி ரூபாய் வரை, சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால், வாக்கு எண்ணிக்கையின்போது, கட்சி தோல்வியை உறுதிசெய்தபோது, வேணுகோபால் ரெட்டி தலைமறைவு ஆகிவிட்டார். ஜூன் 7-ஆம் தேதி வரை வீட்டிற்கு வராததால், கடன் கொடுத்தவர்கள், அவரது வீட்டை சூறையாடிவிட்டார்கள்.

மேலும், வீட்டில் இருந்த ஏசி, சோஃபா, படுக்கை என்று அனைத்து பொருட்களையும் தூக்கி சென்றுவிட்டனர். இந்த தகவலை அறிந்து அடுத்த நாள் வீட்டிற்கு வந்த வேணுகோபால் ரெட்டி, பூச்சி மருந்தை அருந்தி தற்கொலை செய்துக் கொண்டார்.

இந்த தகவல், பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, வேணுகோபால் ரெட்டியின் மனைவி, காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News