முன்னாள் நடிகையும், இந்நாள் அமைச்சருமான ரோஜா, திருத்தனி முருகன் கோவிலுக்கு, சாமி தரிசனம் செய்ய நேற்று அங்கு வந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு, தனது காரசாரமான பதில்களை தெரிவித்தார்.
அப்போது, தன்னை கடுமையாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரோஜா, நல்லது செய்வதற்காக அரசியல் வருபவர்களை விமர்சிப்பது வாடிக்கையாக உள்ளது என்று கூறினார்.
மேலும், ஒரு பெண்ணை தவறாக பேசினால், மற்ற பெண்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள் என்றும், செருப்பால் அடிப்பார்கள் என்றும், பரபரப்பாக கூறினார். இவரது இந்த பேட்டி, பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.