ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னுடைய டிராக்டரை வயலுக்கு ஒட்டிச் சென்றார். அப்போது டீசல் போடுவதற்காக பெட்ரோல் பங்க்-ல் டிராக்டரை நிறுத்தியுள்ளார்.
பணம் கொடுப்பதற்காக கீழே இறங்கிய விவசாயி டிராக்டர் இன்ஜினை நிறுத்தாமல் நியூட்ரலில் வைத்திருந்தார்.
அப்போது டிராக்டர் தானாக ஓடி விவசாயி மீது மோதியது. இதில் கீழே விழுந்த விவசாயி படுகாயம் அடைந்தார்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.