ஆந்திரவில் கடந்தாண்டு ஆண்டு அக்டோபரில் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகாபள்ளி-அலமாண்டா கிராமங்களுக்கு இடையே பலாசா பயணிகள் ரயிலின் மீது ராயகடா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆந்திராவில் நடந்த ரயில் விபத்தின் போது ஒரு ரயிலின் லோகோ பைலட் மற்றும் கோ-பைலட் இருவரும் கிரிக்கெட் போட்டி பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்து நடந்ததுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
மேலும், இது தொடர்பான மேல் விசாரணையில், விபத்தில் உயிரிழந்த லோகோ பைலட்களின் மொபைல் சிக்னல்களை ஆய்வு செய்ததில் அமைச்சர் கூறியது பொய் என தெரியவந்துள்ளது. அமைச்சர் கூறியது போல, ரயிலை இயக்கிய இருவரும் கிரிக்கெட் மேட்சைப் பார்க்கவில்லை என்று தெரியவந்துள்ளது.