இ-ஸ்கூட்டரைப் பழுதுபார்க்கத் தவறியதால் ஷோரூம்க்கு தீ வைத்த வாடிக்கையாளர்

கர்நாடக மாநிலம் கலபுர்கியில் முகமது நதீம் என்பவர் ஆகஸ்ட் மாதம் புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கியுள்ளார். அந்த ஸ்கூட்டரில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வந்துள்ளது. இதனை சரிசெய்ய ஷோரூம்க்கு பலமுறை சென்றும் அங்கிருந்த ஊழியர்கள் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு காணவில்லை.

தொடர் பிரச்சனைகள் மற்றும் ஊழியர்களின் அலட்சியத்தால் விரக்தியடைந்த அவர், ஓலா ஷோரூம் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் சுமார் 8.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News