ANIMAL- படம் வெற்றியா ? மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்ற பிரபல நடிகா் !

பிரபல தெலுங்கு பட இயக்குநா் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் ரன்பீா் கபூா் நடிப்பில் உலகம் முழுவதும் கடந்த டிசம்பா் 1 ஆம் தேதி வெளியான திரைப்படம் ANIMAL.இதில் ராஷ்மிகா மந்தானா,பாபி தியோல் மற்றும் பலா் நடித்துள்ளனா்.

2023 ஆம் ஆண்டிற்கான “முதல் நாள் வசூல்” சாதனை பட்டியலில் அனிமல் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என தகவல் வெளிவந்துள்ளது.அதன்படி, இப்படம் முண்ணனியில்
இருக்கும் பிற படங்களை நாள்போக்கில் பின்னுக்கு தள்ளிவிடும் என திரையுலக விமா்சகா்கள் பலரும் கணித்தள்ளனா்.

இதனால், மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றே அனிமல் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பாபி தியோல் இது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளாா்.

அதாவது, ரசிகர்களுக்கு மிக்க நன்றி. இது கடவுளின் கருணை. இந்த திரைப்படத்தில் நான் ஏற்ற கதாபாத்திரத்திற்கும், என் நடிப்பிற்கும் உங்களிடமிருந்து அதிக பாராட்டுகள் கிடைத்துள்ளது. எனக்கு இது கனவு போல் இருக்கிறது” என தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகின் மற்றொரு முன்னணி கதாநாயகனும், பாபி தியோலின் சகோதரருமான சன்னி தியோல், “பாபி தியோல் உலகையே உலுக்கி விட்டார்” என பாராட்டியுள்ளார்.

இவாின் , இப்பதிவிற்கு பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News