Connect with us

Raj News Tamil

மேலும் அதிகரித்த அனிமல் படத்தின் ரன்னிங் டைம்!

சினிமா

மேலும் அதிகரித்த அனிமல் படத்தின் ரன்னிங் டைம்!

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில், சந்தீப் வாங்கா இயக்கத்தில், சமீபத்தில் வெளியான திரைப்படம் அனிமல்.

3 மணி நேரம் 21 நிமிடங்கள் ஓடிய இந்த திரைப்படம், சமீபத்தில் வெளியான திரைப்படங்களிலேயே அதிக ரன்னிங் டைமை பெற்றிருந்தது.

இந்த விஷயம், ஒரு சிலருக்கு பிடித்திருந்தது, சிலருக்கு பிடிக்கவில்லை. இவ்வாறு இருக்க, இந்த படத்தின் ரன்னிங் டைம், இன்னும் அதிகரிக்க இருப்பதாக, இயக்குநர் சந்தீப் வாங்கா தெரிவித்துள்ளார்.

அதாவது, இப்படம் ஓடிடியில் வெளியாகும்போது, இப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 30 நிமிடங்களாக மாறும் என்று இயக்குநர் கூறியுள்ளார்.

இந்த திரைப்படம், அடுத்த மாதம் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top