அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலம் அடைந்தவர் இயக்குநர் சந்தீப் வாங்கா. இவர் தற்போது ரன்பீர் கபூரை வைத்து அனிமல் என்ற படத்தை எடுத்திருந்தார்.
ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம், சமீபத்தில் வெளியாகி, மாபெரும் வெற்றியை பெற்றது.
அதே சமயம், ஆணாதிக்கத்தை போதிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்ற விமர்சனமும் எழுந்தது.
இவ்வாறு விமர்சனமும், பாராட்டும் பெற்ற இப்படம், திரையரங்குகளில் ஓடி முடித்து, தற்போது OTT ரிலீஸ்-க்கு தயாராகியுள்ளது . அதன்படி, இப்படம் வரும் ஜனவரி 26-ஆம் தேதி அன்று, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.