சந்தீப் வாங்கா ரெட்டி இயக்கத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் அனிமல்.
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இந்த திரைப்படம், ரூபாய் 900 கோடியை வசூலித்து, பிரம்மாண்ட வசூல் சாதனை செய்தது. மேலும், 2023-ஆம் ஆண்டில், இந்திய அளவில் அதிக வசூல் செய்த படங்களில், இது 3-வது இடத்தையும் பெற்றிருந்தது.
இதற்கிடையே, இப்படத்தின் இயக்குநர் சந்தீப், சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், திரையரங்கத்தில் படத்தை வெளியிடும்போது, 3 மணி நேரம் 21 நிமிடங்களுக்கு தயார் செய்திருந்தோம். புற அழுத்தங்கள் காரணமாக, இவ்வாறு வெளியிட்டிருந்தோம்.
ஆனால், இப்படம் ஓடிடியில் வெளியாகும்போது, EXTENDED CUT -ஆக வெளியிடுவோம் என்று கூறியிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள், பெரும் உற்சாகம் அடைந்தனர். இதனால், திரையரங்கில் படம் பார்த்தவர்களும், பார்க்காதவர்களும் ஆர்வத்துடன் இருந்தனர்.
ஆனால், இன்று வெளியான இந்த திரைப்படம், 3 மணி நேரம் 33 நிமிடங்களோடு மட்டுமே வெளியாகியிருந்தது.
மேலும், ரன்பீர் கபூரும், பாபி தியோலின் முத்தக் காட்சியும், ஓடிடி-யில் இடம்பெறவில்லை. இதனால் கடுப்பான நெட்டிசன்கள், தங்களது வருத்தங்களை கூறி வருகின்றனர்.