தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இவர், அஜித், விஜய், ரஜினி, கமல் என்று பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு, பல்வேறு ஹிட் ஆல்பங்களை கொடுத்துள்ளார்.
தற்போது, அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ஜவான் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இவர் இசையமைத்த படங்களிலேயே, ஜவான் படத்திற்கு தான், சிறந்த பின்னணி இசையை கொடுத்துள்ளதாக, அனிருத் கூறியிருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல், ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.