கவின் படத்துக்கு வேட்டு வைத்த அனிருத்!

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் கவின். இவர் சமீபத்தில் நடித்திருந்த ஸ்டார் திரைப்படம், விமர்சன ரீதியாக தோல்வி அடைந்திருந்தாலும், வசூல் ரீதியாக நல்ல லாபத்தை பெற்றிருந்தது.

இந்த படத்தை தொடர்ந்து கிஸ் என்ற படத்தில் நடித்து வந்தார். ஆனால், அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, தகவல் கசிந்துள்ளது. இதற்கு காரணம் இசையமைப்பாளர் அனிருத் என்றும் சொல்லப்படுகிறது.

அதாவது, கிஸ் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் தான் பணியாற்றி வருகிறாராம். ஆனால், இப்படத்திற்கான பாடல்களை, அவர் இன்னும் வழங்காமலே இருக்கிறாராம்.

இதனால், படத்தின் படப்பிடிப்பை நடத்த முடியாமல், பாதியிலே படக்குழு நிறுத்தி வைத்துள்ளார்களாம். படப்பிடிப்பு முடியாமல் தாமதம் ஆவதால், கடன் வாங்கி படப்பிடிப்பை தொடங்கியுள்ள தயாரிப்பாளருக்கு, வட்டி அதிகமாகிக் கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News