Connect with us

Raj News Tamil

“தனுஷ் தான் காரணம்” – விவாகரத்திற்கு பின் முதன்முறையாக தனுஷ் பற்றி பேசிய ஐஸ்வர்யா!

சினிமா

“தனுஷ் தான் காரணம்” – விவாகரத்திற்கு பின் முதன்முறையாக தனுஷ் பற்றி பேசிய ஐஸ்வர்யா!

3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் ஐஸ்வர்யா. இந்த இரண்டு படங்களுக்கு பிறகு, தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெறாத இந்த திரைப்படம், படுதோல்வியை சந்தித்திருந்தது. இந்நிலையில், இயக்குநர் ஐஸ்வர்யா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், லால் சலாம் குறித்தும், தனது முந்தைய படங்கள் குறித்தும், பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்துக் கொண்டார்.

அப்போது, அனிருத்தை அறிமுகப்படுத்தியது நீங்கள் தான். அவர் தற்போது புகழின் உச்சியில் இருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், தனுஷ் தான், அனிருத்தை அறிமுகப்படுத்தினார். வெளிநாட்டிற்கு சென்று படிக்க இருந்த அனிருத்தை, தனுஷ் தான், இசையமைப்பாளராக மாற்றினார் என்று ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

More in சினிமா

To Top