நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், கவின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கிஸ். ஜென் மார்ட்டின் இசையில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கில், வரும் 30-ஆம் தேதி அன்று, ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், நடிகர் கவின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கிஸ் பட பர்ஸ்ட் சிங்கிளின் ப்ரோமோ வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
மேலும், பல வருட கனவு நிறைவேறியிருப்பதாகவும், அனிருத்துக்கு நன்றி எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது, தனது திரைப்படத்தில், அனிருத் பாட வேண்டும் என்ற கனவை, அவர் நிறைவேற்றியிருப்பதாக, கவின் குறிப்பிட்டுள்ளார்.