துணிவு படத்தில் திடீரென இணைந்த அனிருத்!

அஜித்தின் துணிவு படம் தொடர்பான பின்னணி பணிகள் மிகவும் மும்மரமாக நடந்து வருகிறது. அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகர்கள் தங்களது டப்பிங் பணிகளை, வேகமாக முடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த படத்தில் இடம் பெற உள்ள சில்லா சில்லா என்ற பாடலை, அனிருத் பாட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துணிவு படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரானே, இதனை உறுதி செய்துள்ளார். ஏற்கனவே, அஜித்திற்கு அனிருத் பாடிய, ஆலுமா டோலுமா பாடல் பெரிய வெற்றி பெற்ற நிலையில், இதுவும் பெரும் வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.