நம்பர் – 1 இடத்தை பிடித்த அனிருத்..!

தனுஷ் நடிப்பில் வெளியான 3(three) படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் இசையமைத்த இவர், தற்போது பல்வேறு படங்களில் பிசியாக உள்ளார். இந்த நிலையில் பிரபல மியூசிக் ஸ்டீமிங் தளமான ஸ்பாடிஃபை (spotify) 2022 ஆண்டுக்கான புள்ளிவிவர பட்டியிலை வெளியிட்டுள்ளது.

ஆதாவது இந்த ஆண்டில் அனிருத் பாடல்கள் 301 கோடி ரசிகர்களால்,150 கோடி லட்சம் முறை கேட்கபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 182 நாடுகளில் ரசிகர்கள் உள்ளதாக கூறியுள்ள ஸ்பாடிஃபை, தமிழ் இசையமைப்பாளர்களில் முதல் இடத்தை பிடித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. தற்போது அவரது ரசிகர்கள் இது அனிருத்தின் காலம் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.