கற்றது தமிழ், அங்காடித் தெரு, தரமணி, இறைவி என்று பல்வேறு தரமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அஞ்சலி.
இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது, தயாரிப்பாளருடன் திருமணம் என்று பரவிய தகவல் குறித்து பதில் அளித்தார்.
அதாவது, “எனக்கு திருமணம் என்று வெளியாகியுள்ள தகவலில் உண்மை இல்லை. இதேபோல், எனக்கு 4 முறை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.
இது எனக்கு 5-வது கல்யாணம்” என்று கூறி, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.